ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறாக பார்க்கக்கூடாது - ஹர்ஷடி சில்வா

பயங்ரவாத தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறாக பார்க்கக்கூடாது. அனைத்து முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனாலும் சஹ்ரான்களை உருவாக்கிவர்களை இல்லாமலாக்க வேண்டும்.

அத்துடன் மத்திய நிலையில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து அவர்களையும் அந்த அடிப்படைவாத கூட்டத்துக்குள் தள்ளிவிடாமல் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று மக்கள் விடுதமலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரசாங்கமும் அமைச்சர்களும் அறிந்துகொண்டிருந்ததாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

அவ்வாறு யாரும் அறிந்திருக்கவில்லை. எமது பாதுகாப்பு பிரிவினர் அதுதொடர்பில் எமக்கு அறிவுறுத்தி இருக்கவில்லை. அத்துடன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்திய புதன் கிழமை நான் திருகோணமலையில் இருந்தேன்.

அப்போது பேராயர் ஆசிறிபெரேரா என்னுடன் தொடர்புகொண்டு, அனுராதபுரத்தில் மெதடிஸ்த பள்ளிக்கு கல் அடிக்கின்றனர். இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டார். மறுநாள் வியாழக்கிமை நான் பேராயர், பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதமருடன் கலந்துரையாடலை ஏற்பாடுசெய்தேன். அதன்போது அவர்கள் மெதடிஸ்த பள்ளிக்கு கல் அடிப்பது தொடர்பாக கலந்துரையாடினர்.

இதுதொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் டுவிட்டர் அறிவிப்பொன்றை மேற்கொண்டு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் ஏனெனில் மறுநாள் பெரிய வெள்ளிக்கிழமை வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினமாகும் என அறிவுறுத்தியிருந்தோம்” எனத் தெரிவித்தார்.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019