ஒன்றிணைந்து செயற்படுவதனூடாகவே பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்கலாம் - சம்பிக்க

நாட்டின் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதில்  அர்த்தமில்லை. ஆளும் எதிர்கட்சிகள் இணைந்து ஒன்றாக பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் சாராம்சம் என்னவெனில் இந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னர் அரசாங்கம் சரியாக செயற்படவில்லை என்பதேயாகும். 

உண்மையில் இந்த சம்பவம் அரசாங்கதின் பலவீனத்தை காட்டுகின்றது. தவறுக்கு அரசாங்கமாக நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால் இதற்கு தீர்வு அரசாங்கத்தை வீழ்த்துவதா அல்லது அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதா என்பதை சிந்திக்க வேண்டும். 

இன்று புதிய பயங்கரவாதம் பலமடைந்துள்ளது. இதனை வெற்றிகொள்ள மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள செயற்பட வேண்டும். இதில் தவறு எங்கு விடப்பட்டது என்பதை சிந்தித்து அதனை திருத்திக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையில் தொடர்பின்மையே இதற்குக்  காரணம். ஆனால் இன்று நாம் நாடாக வெற்றிகொள்ள வேண்டும். இதில் ஜே.வி.பி - கூட்டமைப்பு - பொதுஜன பெரமுன என அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். 

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019