வஸீம் தாஜுதீன் படுகொலை புதிய தொலைபேசி இலக்கம் கண்டுபிடிப்பு

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று மீள விசாரணைக்கு வந்தது.

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்    கொலையை மறைத்த குற்றத்துக்காக கைதுச் செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, கொலை இடம்பெற்றதாக நம்பப்படும் 2012.05.17 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தை தொடர்புகொள்ள பயன்படுத்தியதாக நம்பப்படும்  புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.

கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை தொடர்புகொண்டோரை கண்டறிய ,  அந்த தொலைபேசி இலக்கத்தை மையப்படுத்திய விசாரணைகள் இடம்பெறுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கிக்கு அறிவித்தனர்.

வஸீமின் கடனட்டை மற்றும் கடந்த தவணையில் அனுமதி பெறப்பட்ட 8 பேரின் வங்கிக்கணக்குகள் தொடர்பிலும் தொடர் விசாரணை இடம்பெறுவதாகவும் நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டது.

கைதாகி விளக்கமறியலில் உள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சிறை காவலர்களினால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

பிணையில் உள்ள முன்னாள் நாரஹேன்பிட்டி குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேராவும் மன்றில் ஆஜராகியிருந்தார்.

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017