டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில்  வருடா வருடம் வழமையாக நடந்து வரும் மேதின பேரணி பொதுக்கூட்டம் இந்த முறையும் கடந்த 1-05-2016 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாபெரும் பொதுக்கூட்ட திடலில், டென்மார்க்கில் பதிவு செய்யப்பட்ட அரசியல் மற்றும் பொது இயக்கங்கள் தங்கள் கொள்கைகள் மற்றும் போராட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவதற்கு ஏதுவாக, சிறு சிறு குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.53bc15a4-540a-496b-8394-22f28972f03f 61c04b40-0d66-4c43-a6ac-0b709dc20212 851586ca-67dd-43e1-bf83-e50565ca685a 84759320-8dcc-4d4c-9aff-a9562796f485 bcec7e5f-d147-43ba-aa87-cd05e4447b46 d994904f-ae2b-4e56-b170-a0261001b4a3
இதில் டேனிஷ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்  சார்பில் திரளான தமிழர்கள் கலந்து கொண்டு, ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளை பற்றியும் அதற்கான சர்வதேச நீதிக்கான அவசியத்தையும், மே தின பேரணிக்கு வந்திருந்த பலதரப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு எடுத்து கூறி விளக்கினர்.
மேலும் அந்த குடிலில், தற்போதைய நிலைமையில் தமிழர்கள் வசிப்பிடங்களில் இலங்கை ராணுவத்தின் கட்டுபாடுகள் அகற்றப்படாமல் இருத்தல், பெண்கள் சிறுவர்களுக்கு அவர்களால் ஏற்படுகின்ற அச்சுறுத்தல் போன்றவற்றை விளக்கும் விதமாக துண்டறிக்கைகள், குறும்பட காணொளி தகடுகள், படக்காட்சிகள் போன்றவற்றை மக்களின் பார்வைக்கு வைத்து விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பல்வேறு வெளிநாட்டவர்கள் ஆர்வத்துடன் வந்து இலங்கை அரசின் அநியாங்களை கேட்டு அறிந்து அவர்களை கண்டிப்பதாகவும், தொடர்ந்து தமிழர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு தங்கள் தார்மீக ஆதரவினை வழங்குவோம் என்றும் உறுதியளித்தனர்.
மொழி தெரியாதவருக்கும் எம் வலி புரிகின்றது – நிச்சயம் ஒரு நாள் நாம் வெல்லுவோம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.