625.472.560.320.505.600.053.800.900.160.100யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த 08ஆம் திகதி கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகிய நிலையில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

நல்லூர் முருகன் ஆலய வருடாந்த பெருவிழா உற்சவம் ஒவ்வொரு வருடமும் “ஆடி அமாவாசை” தினத்திலிருந்து ஆறாம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி “ஆவணி அமாவாசை” தினத்தன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

அந்த வகையில் நல்லூர் உற்சவத்தின் 21ஆம் நாளான கஜவல்லி மஹாவல்லி உற்சவம் மற்றும் வேல்விமானம் (தங்கரதம்) உற்சவம் என்பன வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதன் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் நல்லூர் ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.