02fde372381a9ef50604e178f2c9069af687ebe239d339a2051945180d26b6ba_mini-720x480-720x480தொண்டமனாறு செல்வச்சந்நிதியின் வருடாந்த உற்சவத்தின் 15ம் நாள் தேர்த் திருவிழா இன்று (வியாழக்கிழமை) வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

அதிகாலை விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை 8.00 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்றதனைத் தொடர்ந்து, முருகப் பெருமான் வெளிவீதியுலாவாக தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.

இன்றைய தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருள் ஆசிகளை பெற்றுக்கொண்டனர்.

இதன்போது, முருகப்பெருமானுக்கே உரித்தான காவடி, எடுத்து ஆடிய பக்தர்கள் பகத்தி பரவசத்தில் ஊர்வலமாகச் சென்றனர். அத்துடன், மயிலாட்டம், ஒயிலாட்டம் என மேளதாளம் ஓங்கி ஒலிக்க முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.