032சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்டமொன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளர்.

கடந்த ஆண்டில இந்த உத்தேச சட்டம் தயாரிக்கப்பட்ட போதிலும், எதிர்ப்புக்கள் காரணமாக அது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் பிரதிநிதிகளைக்கொண்டு புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டு சட்டமூலம் மீளவும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உத்தேச சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.