denis-helps-7புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள், யுத்தத்தில் உயிர்நீத்த போராளிகளது குடும்பங்கள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் மற்றும் ஏனைய போராட்ட குழுக்களில் இருந்து இறந்தவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனால் வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்திலுள்ள, அமைச்சரது உப அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் 16 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் பெறுமதியான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இவ்வாறு வழங்கப்பட்ட உள்ளீடுகளில் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 7 குளிர்சாதன பெட்டிகள், மாடு, கோழி வளர்ப்பு உள்ளிட்ட பல வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்திற்கான காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

கடந்த 2014ஆம் ஆண்டு வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரனால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக இவ் உதவி வழங்கும் நடவடிக்கை இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.