சிரிய வன்முறைகள் குறித்து ஒபாமா – புடின் பேச்சு
சிரியாவில் நடைபெறும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அந்நாட்டின் அமைதியைக் குறித்தும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஜி20 மாநாட்டில் ஆலோசித்ததாக தெரிகிறது.
மெக்சிகோவில் தற்போது நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இதில், சிரியாவில் தலைவிரித்தாடும் வன்முறை கலவரங்கள் அடங்கி, அமைதி திரும்புவதையே அனைத்து தலைவர்களும் விரும்புவதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், சிரிய மக்கள் அவர்களாகவே சுதந்திரமாக ஜனநாயகரீதியில் தங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில், தாங்கள் ஒன்றுபட்டுள்ளதாகவும் இருவரும் கூறியிருந்தனர்.






















What do you think?